புதிய நோக்கியா மாடல்கள் ஜூன் மாதம் வெளியிடப்படும்!

2 May, 2017

நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 மற்றும் நோக்கியா 3310 உள்ளிட்ட மாடல்கள் பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்படி தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் ஜூன் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நோக்கியா 8 சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியான நிலையில் புதிய தகவல்களில் நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் 23 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம், ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. நோக்கியா 8 ஸ்மார்ட்போன் மிகவும் மெலிதாக இருக்கும் என்றும் 6GB ரேம் மற்றும் 12 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டது.
மூன்று மாடல்களில் வெளியாகும் என கூறப்படும் இந்த ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளே 5.0 இன்ச் முதல் 5.7 இன்ச் வரை வழங்கப்படும் என்றும் இவற்றின் மெமரி அளவுகள் 64GB முதல் 256GB வரை இருக்கும் என கூறப்படுகிறது, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இந்த ஸ்மார்ட்போன் உலகளவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விலையை பொருத்த வரை 5.0 இன்ச் மாடல் நோக்கியா 8 சுமார் 4,000 யுவான் மற்றும் 5.7 இன்ச் மாடலில் 4500 யுவான் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *