எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.

8 May, 2017

 

இன்று சோமவாரப் பிரதோஷமாகும்.பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். சர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு காலம். அதேபோல, மனிதர்கள் சிவனை வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம். அதில் தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்கு உள்ளது. வளர்பிறை பிரதோஷம் தேவர்களுக்கு உள்ளது.

தேய்பிறை பிரதோஷங்கள் எல்லாமே விசேஷமானது. பெளர்ணமிக்கு பிறகு வரக்கூடிய சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். அதேபோல தேய்பிறையில் வரும் சஷ்டியிலும் விரதம் இருக்கிறோம். தேய்பிறையில் வரக்கூடிய திரியோதசி திதியைத்தான் பிரதோஷ நாள் என்கிறோம். இந்த நாள் எப்பொழுதும் மனிதர்களுக்காக உள்ளது. அதனால் அது விசேஷமானது.

மற்ற நாட்களில் சிவன் மட்டும் காட்சி கொடுப்பார் .பிரதோஷ நாளில், பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானையும் சேர்த்து வணங்கலாம்.

நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் எதாவது ரகசியத்தைச் சொல்வார்கள்.

பொதுவாக பிரதோஷம் அன்று கறந்த பசும்பால் கொடுத்து வழிபட்டால் நல்லது. ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் அல்லது இளநீர் கொடுக்கலாம்.
சிவனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும் ஏனென்றால் இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன்.

இயற்கையான வில்வ இல்லை. அதற்கடுத்து பசும்பால். இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

பிரதோஷத்தில் ஏழு வகைகள் உண்டு.

சுக்ல பிரதோஷம், கிருஷ்ண பிரதோஷம், சனிப் பிரதோஷம் என்று ஒவ்வொரு வாரத்திற்கும் ஒவ்வொன்று உண்டு.

ஞாயிறு அன்று ஆதிப் பிரதோஷம், திங்களன்று சோமவாரப் பிரதோஷம், மங்கள வாரப் பிரதோஷம், புதவாரப் பிரதோஷம், குருவாரப் பிரதோஷம், சுக்ர வாரப் பிரதோஷம் என்று இருக்கிறது. இது எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்தது சனிவாரத்தில் வரக்கூடிய பிரதோஷம். சனிதான் அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அந்த சனிக்கிழமையில் பிரதோஷம் வந்துவிட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் எல்லாம் விலகி சாதகமாக வரும் என்று உள்ளது

 2017ல் பிரதோஷ திகதியும் நாளும்

2017
பிரதோஷ பூஜை நேரம் மாலை-

10 January (Tuesday) மங்கள வாரப் பிரதோஷம்,                  17:55 to 20:27
25 January (Wednesday) புதவாரப் பிரதோஷம்                      18:03 to 20:34
08 February (Wednesday) புதவாரப் பிரதோஷம்                   18:08 to 20:38
24 February (Friday) சுக்ர வாரப் பிரதோஷம்                         18:13 to 20:40
10 March (Friday) சுக்ர வாரப் பிரதோஷம்                              18:15 to 20:40
25 March (Saturday) சனிப் பிரதோஷம்                                  18:16 to 20:39
08 April (Saturday) சனிப் பிரதோஷம்                                     18:17 to 20:38
24 April (Monday) சோமவாரப் பிரதோஷம்                           18:19 to 20:38

08 May (Monday) சோமவாரப் பிரதோஷம்                          18:21 to 20:39

23 May (Tuesday) மங்கள வாரப் பிரதோஷம்                     18:25 to 20:41
06 June (Tuesday) மங்கள வாரப் பிர தோஷம்                   18:29 to 20:45
21 June (Wednesday) புதவாரப் பிரதோஷம்                           19:14 to 20:48
06 July (Thursday) குருவாரப் பிரதோஷம்                          18:35 to 20:51
21 July (Friday) சுக்ர வாரப் பிரதோஷம்                                  18:35 to 20:51
05 August (Saturday) சனிப் பிரதோஷம்                                18:30 to 20:48
19 August (Saturday) சனிப் பிரதோஷம்                                18:24 to 20:43
03 September (Sunday) ஆதிப் பிரதோஷம்                            18:14 to 20:36
17 September (Sunday) ஆதிப் பிரதோஷம்                            18:05 to 20:28
03 October (Tuesday) மங்கள வாரப் பிரதோஷ                   , 17:53 to 20:19
17 October (Tuesday) மங்கள வாரப் பிரதோஷம்,                 17:45 to 20:12
01 November (Wednesday) புதவாரப் பிரதோஷம்                 17:56 to 20:08
15 November (Wednesday) புதவாரப் பிரதோஷம்                 17:35 to 20:06
01 December (Friday) சுக்ர வாரப் பிரதோஷம்                      17:36 to 20:09
15 December (Friday) சுக்ர வாரப் பிரதோஷம்                        17:41 to 20:14
30 December (Saturday) சனிப் பிரதோஷம்                            18:55 to 20:21

பிரதோஷம் அன்று மாலை வேலையில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்க்கு சென்று எல்லாம் வல்ல பெருமானை வழிபடுங்கள் வாழ்வில் சகல வளமும் நலமும் கிட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *