வேலையைப் பறிக்கும் ஆட்டோமேஷன்!

9 May, 2017

உலக அளவில் 100ல் 40 பேருக்கு வேலையிழப்பு ஏற்பட ஆட்டோமேஷன் எனப்படும் தானியங்கிச் சேவைகள் காரணமாவதாகக் கூறப்படுகிறது.

ஆட்டோமேஷன் காரணமாக உற்பத்தி, ஆட்டோமொபைல், ஐடி மற்றும் வங்கி ஆகிய துறைகளில் அதிகமாக வேலையிழப்பு உருவாகி வருகிறது.

ஐந்து வருடங்களுக்கு முன்பு, ஒரு அசெம்ப்ளி லைனில் 1,500 பேர் பணி புரிந்தார்கள் என்றால், இன்று 500 பேர் பணி புரிந்தால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இது, நிறுவனங்களுக்கு லாபகரமானதாகவும் மாறியுள்ளது. இந்த எண்ணிக்கை, 2021ல் இன்னமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது நிறுவனங்களுக்கு லாபமானதாக அமைந்தாலும், தொழிலாளர்களுக்கு பெரும் அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *