பிரித்தானியாவில் அடுத்த ஆண்டிலிருந்து வேலையின்மை பிரச்சனை அதிகரிக்கும்- EY Item Club

15 May, 2017

பிரித்தானியாவின் அரசு சாரா பொருளாதார முன்கணிப்பு குழுவான EY Item Club வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வருடம் 4.7 சதவீதமாக இருக்கும் வேலையின்மை பிரச்சனை அடுத்த வருடம் 5.4 சதவீதமாக உயரும் எனவும், மேலும் 2019ல் 5.8 சதவீதமாக உயரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து EY Item Club-ன் மூத்த பொருளாதார ஆலோசகர் Martin Beck கூறுகையில், பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தையே அதன் சொந்த வெற்றியை தடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஏற்கனவே வேலையில் உள்ள மக்களின் விகிதம் அதிகமாக உயர்ந்துள்ளதால், புதிய ஊழியர்களை நிரப்புவது நிறுவனங்களுக்கு கடினமான ஒன்றாக மாறி வருகிறது என Martin கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் வேலை செய்பவர்களின் சராசரி வருமானம் இந்த வருடத்திலிருந்து 2.75 சதவீதம் உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *