இலங்கையை வந்தடைந்த இந்திய கிரிக்கட் அணி

20 Jul, 2017

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20 – 20 போட்டிகளில் விளையாடுவதற்காக நேற்று மாலை இலங்கை வந்தடைந்ததுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கலந்துகொள்ளும் டெஸ்ட் போட்டி எதிர்வரும 26-ந் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் 16-ந் திகதியுடன் டெஸ்ட் தொடர் நிறைவடைகின்றது.

ஒருநாள் தொடர் ஓகஸ்ட் 20-ந் திகதி முதல் செப்டம்பர் 1-ந் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஒரேயொரு 20 ஓவர் போட்டி செப்டம்பர் 6-ந் திகதி நடைபெறவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்திய அணி 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

இந்த பயிற்சி ஆட்டம் நாளை தொடங்கவுள்ளது.

இந்திய அணி கடைசியாக 2015-ம் ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது.

3 டெஸ்ட் கொண்ட இந்த தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *