ரஷ்யா, ஈரான், வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை

28 Jul, 2017


தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம்சாட்டி, ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடையை அமெரிக்கா விதிக்க உள்ளது. இதற்கான மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.

அமெரிக்காவில் கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாகவும், அதிபர் டிரம்ப்பின் வெற்றிக்கு மறைமுகமாக உதவி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில், டிரம்ப்பின் உதவியாளர்கள், குடும்பத்தினரும் கூட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.

இது, டிரம்ப்புக்கு பேரிடியாக உள்ளது. அதே நேரம், தனது தேர்தலில் ரஷ்யா மூக்கை நுழைத்தது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், தனது நட்பு நாடுகளின் எண்ணெய் வளத்தை கபளீகரம் செய்யும் முயற்சியிலும் ரஷ்யா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

அதேபோல், உலக நாடுகளின் எச்சரிக்கைகளை மீறி தொடர்ந்து அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வடகொரியா, தீவிரவாத அமைப்புகளுக்கு உதவிகள் செய்து வரும் ஈரான் ஆகிய நாடுகளும் கூட தனது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தாக இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது.

எனவே, இந்த நாடுகளின் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *