பிரான்ஸ் அகதிகள் விடயத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

3 Aug, 2017


பிரான்ஸின் Calais நகரில் தங்க இடமில்லாமல் சாலையில் வசிக்கும் அகதிகளுக்கு அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரான்ஸின் Calais நகரில் பெரிய அளவிலான Jungle குடியிருப்பு முகாம் இருந்தது. அங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் தங்கியிருந்தார்கள்.
இந்நிலையில் குறித்த முகாமை கலைக்கவும், அங்கிருந்த மக்களை வெளியேற்றவும் அரசு கடந்த வருடம் அக்டோபரில் உத்தவிட்டது.

முகாமில் பாலியல் பலாத்கார பிரச்சனைகள், கடத்தல் பிரச்சனைகள் போன்ற குற்றங்கள் நடப்பதால் முகாமை அரசு மூடியது.
இதையடுத்து முகாமிலிருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள் பலர் தங்க இடம் கிடைக்காமல் Calais-ன் சாலை பகுதிகளில் சரியான உணவு, தன்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வந்தார்கள்.
இந்நிலையில், இது போல தங்கியிருக்கும் அகதிகளுக்கு தண்ணீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் போன்ற சுகாதார வசதிகளை உடனடியாக அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதோடு அகதிகளுக்கு தங்க இடங்களை ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரார்ட் கூறுகையில், Calais-லிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அகதிகளுக்கு குடியிருப்பு முகாம்கள் அமைக்கப்படும் என கூறியுள்ளார்.
முகாம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள Calais மேயர் Natacha Bouchart கூறுகையில், அகதிகளால் இங்கு ஏற்கனவே பிரச்சனை ஏற்பட்டது.

அதனால் நீதிமன்றத்தின் முகாம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை ஏற்க முடியாது. இங்கு வாழும் மக்களுக்கு இது அச்சுறுத்தலாக இருக்கும் என கூறியுள்ளார்.
Calais பகுதியிலிருந்து அகதிகள் அடிக்கடி சட்ட விரோதமாக லொறிகள் மூலம் பிரித்தானியா தப்பி செல்ல முயலும் சம்பவங்களும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *