உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்! இணைந்தன ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அணி

21 Aug, 2017


தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க கட்சியின் பிளவு சரி செய்யப்பட்ட நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இந்நாள் முதலமைச்சர் பழனிச்சாமி ஆகியோர் இணைந்துள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க கட்சி ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் என இரண்டு அணிகளாக பிளவடைந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்த நிலையில் சற்று முன்னர் தலைமை களகம் வந்த இரு தரப்பினர்களும் இணைந்துள்ளனர்.

தலைமை களகத்திற்கு விரைந்த முதலமைச்சர்கள்! ஆளுநர் மாளிகையில் தலைமை செயலாளர்

அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகைத்தந்துள்ளார்.

அத்துடன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ஆளுநர் மாளிகைக்கு தமிழகத்தின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விரைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ள நிலையில் அவர், ஆளுநர் மாளிகைக்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அணிகள் இணையவுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.

உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்! சற்று நேரத்தில் பாரிய அரசியல் மாற்றம்?

தமிழகத்தின் அரசியலில் மீண்டும் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்தயாசாகர் ராவ் அவசரமாக சென்னை திரும்பியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியால் ஆளும் கட்சியான அ.தி.மு.க இரண்டாக பிரிவடைந்த நிலையில் தற்போது மூன்றாகவும் பிளவடைந்துள்ளது.

ஓ.பி.எஸ் அணி, ஈ.பி.எஸ் அணி என இரண்டாக இருந்த அ.தி.மு.க தற்போது, திவாகரனுக்கு ஆதரவு தெரிவித்த மூன்றாவதாக ஒரு அணியும் உருவாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணிகள் இணைவு குறித்து பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இரு அணிகளும் இன்று இணைவது உறுதியாகியுள்ளது.

அத்துடன் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, துணை முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் நியமிக்கப்படவுள்ளதாகவும், மாஃபா பாண்டியன் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையிலேயே, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் மும்பையிலிருந்து அவசரமாக சென்னை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் பிளவுபட்டுக் கிடக்கும் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் முதல்வர் பழனிசாமி அணிகள் இணைப்பு குறித்து ஒரு சில மணி நேரங்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசியல் களமும், ஊடகங்களும் பரபரப்பின் உச்சத்தில் உள்ளன. ஏறத்தாழ 7 மாத கால அ.தி.மு.க உள்கட்சிப் பூசல் முடிவுக்கு வரும் நாளாக இன்றைய தினம் அமையும் என்று அ.தி.மு.கவினர் பரபரப்பின் உச்சத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *