தொடரும் மழை

8 Sep, 2017


நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும், குறிப்பாக தென்மேற்கு பகுதிகளில் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில பிரதேசங்களில் குறிப்பாக மேற்கு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மணிக்கு சுமர் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையிலான கன மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு தெற்கு சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் மணிக்கு 75 முதல் 100 மில்லிலீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காலைவேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். பொதுமக்கள் இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் அனத்தங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *