எதிர்வரும் ஒக்டோபர் மாதம் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம்

11 Sep, 2017


எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் சமய ஆசீர்வாதங்களுடன் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மகாவலி விவசாய சமூகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து விவசாய சமூகத்தினதும் பங்களிப்புடன் நாட்டுக்கு தேவையான உணவை உற்பத்திசெய்வதற்காக அரசாங்கம் இத்திட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொலன்னறுவை தேசிய விளையாட்டரங்கில் மகாவலி விவசாய சமூகத்தினரின் பிள்ளைகளின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் நேற்று இடம்பெற்ற நிறைவு விழாவில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மேலும் , அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம் போன்ற தேசிய நிகழ்ச்சித்திட்டங்களின் முக்கிய தூதுவர்களாக இந்த இளைஞர் யுவதிகளை பங்குபற்றச்செய்யமுடியும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *