சட்டவிரோதமாக மரம்வெட்டியோர் கைது

11 Sep, 2017


திருகோணமலை கப்பல் துறை காட்டுப் பகுதியில் உள்ள துறைமுக அதிகாரசபை காணிகளுக்குள் வைத்து கிண்ணியாவைச் சேர்ந்த 05 நபர்கள் சந்தேகத்தின் பெயரால் விசேட அதிரடிப்படையினரால் கைதி செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று 10ம் திகதி இடம் பெற்ற இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவது கப்பல் துறை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக காட்டு மரங்களை வெட்டினார்கள் மற்றும் புராதன சின்னங்களை சேதப்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திருகோணமலை கண்டிவீதியில் அமைந்துள்ள சர்தாபுர விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு சீனக்குடா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *