திருமலையில் தனியார் பேருந்து வேலை நிறுத்தம்

11 Sep, 2017


திருகோணமலை தனியார் பேருந்து போக்குவரத்து நடவடிக்கைக்கான தகுதியான நேர கணிப்பாளரை நியமிக்குமாறு கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.கிழக்கு மாகாணசபைக்கு முன்னால் தமது பேருந்துகளை நிறுத்தி பேருந்துகளின் மீது பதாதைகளை தொங்க விட்டு இந்த போராட்டத்தில் இன்று (11)ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் அப்துல் ஹசன் பலீல் இவ்வாறு தெரிவிக்கிறார்.

திருகோணமலையில் உள்ள நேர கணிப்பாளர்கள் 04 பேர் உடனடியாக இடமாறம் செய்யப்பட்டுள்ளனர் அதற்கு பதிலாக தகுதி இல்லாதவர்களை நியமித்துள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட நேர கணிப்பாளர்களுடன் பேருந்து நடவடிக்கைகளை மேற் கொள்வதில் தினமும் முரண்பாடுகளை எதிர் நோக்ககின்றோம்.ஆகவே எமக்கு சரியான தீர்வு கிடைக்காது போனால் நாம் இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *