சைட்டம் – வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம்

12 Sep, 2017


மாலபே சைட்டம் தனியார் வைத்திய கல்லூரி தொடர்பிலான சர்ச்சைகளுக்கு, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவிடமிருந்தும் தீர்வுகள் கிடைக்காததனால் 12.09.2017 அன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், சுழற்சி முறையில் வேலைநிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் 12.09.2017 அன்று வைத்திய சேவைகள் செயழிழந்து காணப்பட்டன.

அட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்ட தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்தனர்.

வெளிநோயளர் பிரிவு மற்றும் கிளினிக் முழுமையாக செயழிழந்ததனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகியிருந்தனர்.

எனினும் நோயளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்கியமை குறிப்பிடதக்கது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி மேலும் பல தொழிற்சங்கங்களை இணைத்துக்கொண்டு மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *