நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக சீனி உப்பு எண்ணெய் போன்றவற்றுக்கு வரி

12 Sep, 2017


தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக சீனிஇ உப்புஇ எண்ணெய் போன்றவற்றுக்கு வரி விதிக்க வேண்டுமெனறு சுகாதார போஷாக்கு மற்றம் சுதேச வைத்தியத்துறை சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
இதன் மூலம் 2025ம் ஆண்டளவில் நோய்களை பெருமளவில் கட்டுப்படுத்தலாமென்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

சுகாதார சேவையில் மனித வளங்களை மேம்படுத்தி தரமான சுகாதார சேவையை உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தின் கீழ் புதிதாக ஆயிரத்து 614 தாதி பயிலுனர்கள் பயிற்சிக்காக நேற்று சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.. இதன் போது இந்தச் சேவையில் நியமனம் பெறும் 888 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியும் இடம்பெற்றது. இதுதொடர்பாக அலரி மாளிகையில் நடைபெற்ற நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் நிதிப் பயன்பாட்டை நியாயமான நிலைக்கு கொண்டுவர முடிந்திருப்பதாக அமைச்சர் அங்கு சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக சுகாதார சேவையில் ஒளடத மாபியாவுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஊழல் மோசடிகளை குறைக்க முடிந்தது. இதன் காரணமாகஇ இலங்கையின் சுகாதார சேவை ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறதென உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *