இன்று மாலை ஐ.நா.சபையில் ஜனாதிபதி உரை

19 Sep, 2017


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா.சபையின் பொதுக்கூட்டத்தொடரில் அமெரிக்க நேரப்படி இன்று மாலை 5.00 மணிக்கு உரையாற்றவுள்ளார்.
உலகத்தலைவர்களின் கவனத்தை ஈர்ந்துள்ள சமகால தேசிய அரசாங்கத்தின் சவாலாக அமைந்துள்ள சமாதானம் ,நல்லிணக்கம் தொடர்பிலான அரசாங்கத்தின் நடவடிக்கையில் இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி ஆற்றவுள்ள உரையில் இவர்கள் கவனம் செலுத்தவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை ஐ.நா.சபையின் பொருளாதாரம் மற்றும் சமூகம் சபைக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த சபைக்கூட்டத்தொடரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , பிரான்ஸ்; ஜனாதிபதி இமானுவேல் மக்றோ ஆகியோர் முதன்முறையாக கலந்துகொண்டுள்ளனர்.

இதேபோன்று ஐ.நா.சபையின் செயலாளர் நாயகம் பதவிப்பொறுப்பை ஏற்றுள்ள அந்தோனியோ குற்றீஸ் முதன்முறையாக இந்த ஐ.நா.சபையின் பொதுக்கூட்டத்தொடரில் கலந்துகொள்கின்றார்.

ஜனாதிபதிக்கும் செயலாளர் நாயகத்திற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது .

இன்று மாலை பிரிட்டிஸ் பிரதமர் திரேசா மே மற்றும் மோல்ற்றாவின் பிரதமர் ஜோசப் மஸ்கட் , ஐ.நா.சபையின் அரச தலைவர்களுக்கான கலந்துரையாடலில் ஜனாதிபதியும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *